ஐபிஎல் தொடரில் இருந்து சச்சின் மகன் திடீர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
14வது ஐபிஎல் சீசனில் இருந்து சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14வது ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மற்ற அணிகள் கடுமையாக போராடி வருகிறது.
இதனிடையே இந்த சீசனில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இது இவருக்கு முதல் சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் ஒரு போட்டியில்கூட களமிறக்கப்படவில்லை.
இனிவரும் போட்டிகளிலாவது களமிறக்கப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக டெல்லியைச் சேர்ந்த புதுமுக வீரர் சமர்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயம் காரணமாக அர்ஜூன் டெண்டுல்கர் விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் சமர்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், தனிமை முகாமில் இருந்தப் பிறகு அணியில் இணைந்துகொள்வார் எனத் தெரிவித்துள்ளது.இதனால் சச்சினின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.