இந்தியாவின் அடுத்த பிரதமராகும் யோகி ஆதித்யநாத் - அர்ஜூன் சம்பத் பேச்சால் பரபரப்பு
இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இருப்பதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ள நிலையில், மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஐபிசி தமிழ்நாடு் யூடியூப் சேனலுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இருப்பதாகவும், அப்படி ஆனால் பிரிவினை கருத்துகளை பரப்பும் திமுக கட்சியை தடை செய்வோம் என கூறியுள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி குஜராத்தை முந்தி விட்டதாகவும், அங்கு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் யோகி ஆதித்யநாத் நிறைவேற்றியுள்ளதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.