திமுகவின் 100 நாள் ஆட்சி வேதனையாக அமைந்துள்ளது - அர்ஜூன் சம்பத்
தமிழகத்தில் திமுகவின் 100 நாள் ஆட்சி வேதனையாக அமைந்ததே தவிர சாதனை அல்ல என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள குமரன் நினைவகத்தில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , திமுகவின் 100 நாள் சாதனை நூற்றாண்டு சாதனையாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றனர், ஆனால் 100 நாட்கள் வேதனையாக அமைந்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும் பிரதமர் மோடி பதவியேற்ற பின்பு தான் சுதந்திர தினத்திற்கும், தேசியக் கொடிக்கும் முழு மரியாதை கிடைத்துள்ளது என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.