சிட்டி ரோபோவுடன் திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்?

party flag moorthy robo
By Jon Mar 10, 2021 02:41 PM GMT
Report

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாகக் கூறி, நிர்வாகிகளாக அர்ஜுன மூர்த்தியையும் தமிழருவி மணியனையும் நியமித்தார். ஆனால் , ரஜினி வழக்கம்போல அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

அர்ஜுன மூர்த்திக்கு பெருத்த ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். மீண்டும் பாஜகவில் இணையாமல் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர் ,பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு ரோபோ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் அர்ஜுனமூர்த்தி வெளியிட்டார். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளின் அறிக்கையினை விட வித்யாசமான தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் அர்ஜுன மூர்த்தி வெளியிட்டிருக்கிறார்.

சிட்டி ரோபோவுடன் திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்? | Arjun Moorthy City Robo Report Leader Party

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள். குடும்பஅட்டைதாரர்களுக்கு தினமும் 1/2 லிட்டர் முதல் 1 லிட்டர் வரை இலவச பால் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு வரை விவசாயப் பாடம் கட்டாயம். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டையுடன் பெட்ரோல் அட்டை வழங்கப்படும்.

இந்த அட்டையைப் பயன்படுத்தி, மாநில அரசின் விற்பனை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி, இரவு நேர பேருந்து பயணத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். 60 வயதை கடந்து பொது வாழ்வில் இருப்பவர்களைக் கௌரவிக்க நல்லோர் குடியிருப்பில் வீடு வழங்கப்படும்.

தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் விவசாயம் என்ற ஸ்மார்ட் விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கைகள் பலன் தருமா என கூறும் முன்பு.இது மற்ற கட்சியின் (காப்பி) நகல் அறிக்கை என யாரும் சொந்தம் கொண்டாட முடியாத அளவில் அறிக்கை உள்ளது.

சிட்டி ரோபோவினை சின்னமாக பெர்றுள்ள இந்திய மக்கள் முன்னேற்றகழகம் தேர்தல் களத்தில் ஜெயிக்குமா? அது மக்கள் கையில் தான் உள்ளது.