நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்: வாக்குறுதிகளை அள்ளி வீசியஅர்ஜுன மூர்த்தி
ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க இருந்த நிலையில் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய அர்ஜுன மூர்த்தி ரஜினியுடன் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ரஜினி உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரபோவதில்லை என்று அறிவித்த நிலையில் அர்ஜுன மூர்த்தி தனி கட்சி தொடங்க ஆயத்தமானார்.

அதன்படி ”இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” என்ற புதிய கட்சியை அர்ஜுன மூர்த்தி தொடங்கியுள்ளார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள அர்ஜுனமூர்த்தி, “பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும்.
எனது இமமுக ஆட்சிக்கு வந்தால் நான்கு துணை முதல்வர் பதவி கொண்டுவரப்படும் ” என்று தெரிவித்தார்