பாஜகவில் இணையப் போகும் நடிகர் அர்ஜுன்?
பிரபல நடிகரான அர்ஜுன் விரைவில் பாஜக-வில் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர்கள் மற்றும் பிரபலங்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. குஷ்பு, நமீதா, கௌதமி என பாஜக-வில் பிரபலங்கள் வரிசையாக இணைந்துள்ள நிலையில், தற்போது அர்ஜுன் இணையப்போவதாக தெரிகிறது.
சமீபத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷண் ரெட்டி ஆகியோரை சென்னையில் அர்ஜுன் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து வெளியான தகவலில், பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அர்ஜுன்.
அவர் பாஜக-வில் இணைவாரா அல்லது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என தெரிவித்துக்கப்பட்டுள்ளது.