நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள் - இருவர் உயிரிழப்பு
நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
விமான விபத்து
அமெரிக்காவில் கடந்த மாதம் மட்டும் 4 விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் அலஸ்காவில் வர்த்தக ஜெட்லைனரும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.
தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மரானா பிராந்திய விமான நிலைய பகுதியில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தை சந்தித்துள்ளது.
இருவர் பலி
ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா 172S மற்றும் லங்கார் 360 MK II விமானங்கள் உள்ளூர் நேரப்படி நேற்று (19.02.2025) காலை 8:30 மணியளவில் தரையிறங்க முயலும் போது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஒரு விமானம் தீ பிடித்து வெடித்து சிதறியுள்ளது.
இரு விமானங்களிலும் தலா இருவர் பயணித்துள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற இருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் இல்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.