முதல்நாள் சமைத்த சிக்கன் குழம்பை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம்!
மிஞ்சிய கோழி குழம்பை சூடு செய்து சாப்பிட்டதால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிஞ்சிய குழம்பு
அரியலூர் மாவட்டம் கூழாட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதி வசித்து வருகிறார்கள். இவருக்கு 2 மகள்கள்,1 மகன் உள்ளனர். கோவிந்தராஜ் புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போடும் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்தவர்கள் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். மிஞ்சிய கோழி குழம்பை பிரிட்ஜில் வைத்துவிட்டு, அடுத்தநாள் சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். மீதமான குழம்பை சாப்பிட்ட கோவிந்தராஜின் இளைய மகளாகிய ஏழாம் வகுப்பு பயின்று வரும் இலக்கியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழப்பு
பதற்றமடைந்த பெற்றோர்கள் உடனடியாக அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய கோழிக்கறி குழம்பை சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.