Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள் வெளியான அதிர்ச்சி வீடியோ
பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் 'வாரிசு' படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துள்ளனர்.
வாரிசு ஆடியோ வெளியீடு
இந்த நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விலையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் விஜய் தனது பட நிகழ்ச்சியின் போது குட்டிஸ்டோரி சொல்வது வழக்கம் , அந்த வகையில் தற்போது விஜயின் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படையெடுத்து வந்தனர், அதிகமானோர் வந்ததன் காரணமாக பலரும் டிக்கெட் கிடைக்காமல் கால் வலிக்க காத்திருந்தனர்.
போலீசாரிடம் தள்ளு முள்ளு
அரங்கிற்குள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் முறையான நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.
#VarisuAudioLaunch | #என்நெஞ்சில்குடிஇருக்கும் pic.twitter.com/7Od2GquLSP
— NG Sudharsan (@NgSudharsan07) December 24, 2022
அனுமதி சீட்டு இல்லாதவர்கள் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை தடுக்க முயன்ற போலீசாரை சில நபர்கள்ரசிகர்கள் போலீசாரை கீழே, தள்ளி செருப்புகளை பறக்க விட்டு கேட்டுகளை எட்டி உதைத்து பேனர்களை கிழிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
தள்ளு முள்ளு செருப்புகள் சிதறி கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.