கம்பத்தை கதறவிடும் அரிசிக்கொம்பன் யானை - பின்தொடரும் வனத்துறை
கம்பத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை கதற விட்ட அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அரிசிக்கொம்பன் யானையை தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறை
கேரளாவில் இருந்து அண்மையில் இடம்பெயர்ந்த அரிசிக் கொம்பன் யானை சண்முகா நதி அணைப் பகுதியை ஒட்டியுள்ள காப்புக்காடுகளில் சுற்றி வருகிறது.
அரிசிக்கொம்பன் யானை விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதவாறு 24 மணி நேர சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவக்குழுவினருடன் இணைந்து 5 இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணையை ஒட்டிய காப்புக்காடுகளில் முகாமிட்டுள்ள அரிசிக்கொம்பன் யானைக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் அப்பகுதியில் இருப்பதால் காப்புகாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு குறைவு என வனத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.