இலவசங்கள் தவறு என்ற வாதமே தவறு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DMK Ma. Subramanian
By Irumporai Aug 25, 2022 09:58 AM GMT
Report

இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு, யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இன்று சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

இலவசங்கள் தவறு என்ற வாதமே தவறு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Argument That Freebies Minister M Subramanian

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட மிதிவண்டியை விட வலுவான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு

இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு, யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இதனை சரியாக செயல்படுத்தியதால் தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.   

மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்கிறது. அதன்பின் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட வேண்டிய நிலை உள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.