விமானத்தில் பயங்கரமாக தாக்கிக்கொண்ட பயணிகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Viral Video Flight
By Nandhini Dec 29, 2022 09:42 AM GMT
Report

விமானத்தில் பயங்கரமாக தாக்கிக்கொண்ட பயணிகளின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பயங்கரமாக தாக்கிக்கொண்ட பயணிகள் 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கடந்த டிசம்பவர் 27-ம் தேதி பாங்காக்கிலிருந்து கொல்கத்தாவுக்குப் பயணம் செய்யும் போது விமானத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை பயணிகள் சிலர் சரமாரியாகத் தாக்குகின்றனர். 2 ஆண்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக தகராறு செய்வதையும், ஒரு விமானப் பணிப்பெண் சண்டையை நிறுத்த முயற்சிக்கிறார்.

வாக்குவாதத்தின் நடுவில், ஒருவருக்கு ஆதரவாக மேலும் 6 பேர் வருகிறார்கள். பின்னர் அவர்கள் மற்றவரை அடிக்கத் தொடங்குகிறார்கள். தகராறு செய்வதைக் கண்ட ஒருவர் மற்றவரை அறைந்து முடியை இழுக்கத் தொடங்குகிறார். மற்ற பயணிகள் அனைவரும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

argument-flight-fight-video-video