Wow... அர்ஜென்டினா மக்கள் முன் தோன்றிய மெஸ்ஸி... - உற்சாகத்தில் துள்ளி குதித்து கொண்டாடிய மக்கள்...!
அர்ஜென்டினா மக்கள் முன் தோன்றிய மெஸ்ஸியைப் பார்த்த அந்நாட்டு மக்கள் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா
நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
மக்கள் முன் தோன்றிய மெஸ்ஸி
நேற்று முன்தினம் இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அன்றிலிருந்து கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நாளை அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்காக குவிந்துள்ள மக்கள் முன் மெஸ்ஸி வந்தார். அர்ஜென்டினாவுக்கு திரும்பிய லயோனா மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா வீரர்களுக்கு மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். மெஸ்ஸியைப் பார்த்து மக்கள் உற்சாகத்தில் கத்தி, கூச்சல் போட்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்ல உலக மக்களும் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
This Is Argentina! ?? Home Of Leo Messi! ? pic.twitter.com/CAcOdD71NK
— Leo Messi ? (@WeAreMessi) December 20, 2022
Absolute scenes in Buenos Aires. ?
— Leo Messi ? (@WeAreMessi) December 20, 2022
Leo Messi and Argentina get a massive welcome on returning to Argentina! ❤️?? pic.twitter.com/hdpBhHYcTZ
This is Argentina at 4 am
— Messi Media (@LeoMessiMedia) December 20, 2022
Beautiful scenes ? pic.twitter.com/wx6Y250iTm
I went to Argentina because of the love for Messi.
— MBAH (@mbahdeyforyou__) December 20, 2022
I am the one standing behind this lady.. pic.twitter.com/LGuPHt2w71