அப்பப்பா.... மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் பியூனஸ் அயர்ஸ் நகரம் - வாயடைத்த உலக மக்கள்...!
அர்ஜென்டினா, பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் போல் திரண்டு மக்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா
நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் பியூனஸ் அயர்ஸ் நகரம்
நேற்று முன்தினம் இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அன்றிலிருந்து கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நாளை அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் போல் திரண்டு வரும் மக்களின் கொண்டாடத்தைப் பார்த்து உலக மக்கள் வியந்து வருகின்றனர். மேலும், அர்ஜென்டினாவிற்கு உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
This is a CELEBRATION‼️#BuenosAires #FIFAWorldCup #Argentina pic.twitter.com/SM99eGV5fp
— #UNPLAYABLE (@UnplayableZA) December 20, 2022
This is Buenos Aires, Argentina ? pic.twitter.com/PNmFnweejS
— ?????????? ❁ (@ch3pchumba) December 20, 2022
Buenos Aires celebrating after Argentina won the World Cup.
— Visegrád 24 (@visegrad24) December 20, 2022
?? pic.twitter.com/pU3yJujosU