மெஸ்ஸிக்கு ஆதரவாக கிராம மக்களிடம் சண்டைப்போட்ட சிறுமி...! வைரலாகும் வீடியோ...!

Lionel Messi Viral Video
By Nandhini Dec 20, 2022 10:09 AM GMT
Report

மெஸ்ஸிக்கு ஆதரவாக கிராம மக்களிடம் சண்டைப்போட்ட சிறுமியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிராம மக்களிடம் சண்டைப் போட்ட சிறுமி

நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது. அப்போது, கிராம மக்களில் சிலர் சிறுமியிடம் மெஸ்ஸியை ட்ரோல் செய்து கிண்டல் செய்து சிரித்தனர். 

அப்போது, மெஸ்ஸிக்காக அச்சிறுமி கிராம மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டார். 

தற்போது இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இச்சிறுமி மெஸ்ஸி மேல் எவ்வளவு உறுதியான நம்பிக்கை வைத்து நின்று சண்டைப்போட்டுள்ளார்... என்று நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், மெஸ்ஸி ரசிகர்கள் அச்சிறுமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். 

argentina-messi-fan-trolled-village-girl-fight