Thursday, Apr 3, 2025

அர்ஜென்டினா வெற்றி... - மைதானத்தில் அரைநிர்வாணமாக கொண்டாடிய பெண்கள் கைது..?

Lionel Messi Football Argentina
By Nandhini 2 years ago
Report

அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டத்தில் மைதானத்தில் அரைநிர்வாணமாக கொண்டாடிய பெண்களால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

கடந்த 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.

அரைநிர்வாணமாக வெற்றியை கொண்டாடிய பெண்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றிபெற்றவுடன், கத்தார் லுசைல் மைதானத்தில் இருந்த 2 பெண்கள் தங்களின் மேல் சட்டையை கழற்றி கையில் சுற்றி, அரை நிர்வாணமாக குத்தாட்டம் போட்டனர். இவர்களின் நடனத்தை அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து ரசித்து மகிழ்ந்தனர்.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

argentina-champion-women-celebrated-in-semi-nude

பெண்கள் கைது?

கத்தார் நாட்டு சட்டத்திட்டங்களின் படி பொதுவெளியில் எவரேனும் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆதலால், கத்தாரில் கால்பந்து ரசிகர், ரசிகைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. 

இந்நிலையில், மேலாடையை கழற்றி நடனமாடிய பெண்கள் மீது கத்தார் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அந்தப் பெண்கள் குறித்து விவாதம் நடந்து வருகிறது.

அப்பெண்ணின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெற்றியை ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் அந்நாட்டு ரசிகை அதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பலர் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.