அர்ஜென்டினா ரூபாய் நோட்டில் லயோனல் மெஸ்ஸி புகைடப்படம் வைக்க பரிசீலனை..!
உலககோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் முன் தோன்றிய சாம்பியன்கள்
கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நேற்று அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்தது.
நேற்று லயோனல் மெஸ்ஸியின் தலைமையிலான சாம்பியன்கள் பியூனஸ் அயர்ஸ் தெருவில் 4 பில்லியனுக்கு மேல் கூடியிருந்த மக்கள் முன்பு பஸ்ஸில் தோன்றினர். மெஸ்ஸியைப் பார்த்ததும் மக்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். உலக சாம்பியன்களுக்கு அர்ஜென்டினா மக்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
ரூபாய் நோட்டில் லயோனல் மெஸ்ஸி
இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் லயோனல் மெஸ்ஸி புகைப்படம் வைக்க அந்நாடு அதிகாரப்பூர்வமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: Argentina is officially considering putting Lionel Messi on the country's banknotes ?? pic.twitter.com/Fk8Uj9397o
— Lionel Messi (@LMessiStuff) December 21, 2022