மெஸ்ஸி T.Shirtக்கு முத்தம் கொடுத்து கதறி அழுத ஏழை தொழிலாளி... - வைரலாகும் வீடியோ...!
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி மெஸ்ஸி T.Shirtக்கு முத்தம் கொடுத்து கதறி அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டாட்டத்தில் அர்ஜென்டினா மக்கள்
கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
கதறி அழுத ஏழைத் தொழிலாளி
இந்நிலையில், பியூனஸ் அயர்ஸ் நகரமே கொண்டாட்டத்தில் இருந்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஏழைத் தொழிலாளி சட்டை இல்லாமல் தனது வண்டியை தள்ளிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மெஸ்ஸி ரசிகர் ஒருவர் அவரை கட்டியணைத்து மெஸ்ஸியின் T.Shirtடை கொடுத்தார். மெஸ்ஸியின் T.Shirftடை பார்த்ததும் அந்த ஏழைத் தொழிலாளி முத்தம் கொடுத்தார். அந்த T.Shirt பார்த்தபடியே கதறி அழுதார். பின்பு, அதை போட்டுக்கொண்டு தரையில் தொட்டு தன் நாட்டிற்கு மரியாதை செலுத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் நெகிழ்ச்சியில் உறைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
This is what its Means to the People of Argentina ?? to win the World cup
— Dibya (@brown_walkers7) December 21, 2022
Football is Beautiful ❤️ pic.twitter.com/YTXgnX5ekR