திடீரென நிறுத்தப்பட்ட அணிவகுப்பு... ஹெலிகாப்டர் மூலம் மெஸ்ஸி வெளியேற்றம்...! - வெளியான காரணம்..!
அர்ஜென்டினாவில் பியூனஸ் அயர்ஸ் தெருவில் திடீரென அணிவகுப்பு நிறுத்தப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் மெஸ்ஸி வெளியேற்றப்பட்டார்.
மக்கள் முன்பு தோன்றிய அர்ஜென்டினா சாம்பியன்கள்
கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை அணிவகுப்புக்காக 4 மில்லியன் மக்கள் பியூனஸ் அயர்ஸ் தெருக்களுக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற லயோனல் மெஸ்ஸியின் தலைமையிலான சாம்பியன்கள் பியூனஸ் அயர்ஸ் தெருவில் கூடியிருந்த மக்கள் முன்பு பஸ்ஸில் தோன்றினர். மெஸ்ஸியைப் பார்த்ததும் மக்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர். உலக சாம்பியன்களுக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
ஹெலிகாப்டரில் வெளியேற்றப்பட்ட மெஸ்ஸி
ஆனால், மெஸ்ஸியின் வாகனத்தில் அணிவகுத்து வந்துக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் சிலர் அந்த வாகனத்தின் மீது குதித்தனர். மேலும், சிலர் வாகனத்தில் குதிக்க முற்பட்டு கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். மக்கள் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க வாகனம் செல்லமுடியாமல் அப்படியே நின்றது. இதனால், லயோனல் மெஸ்ஸி ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டார்.
பலத்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில், மெஸ்ஸி அவரது வீட்டிற்கு வந்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Lionel Messi had to be evacuated by helicopter at the Argentina World Cup parade after being swarmed by an estimated 4 million people ? pic.twitter.com/CHVmtwv4qn
— My Mixtapez (@mymixtapez) December 21, 2022
Imagine being #Messi in #Argentina! ???⚽️ pic.twitter.com/RYVLuzLVk9
— Jordan Schultz (@Schultz_Report) December 21, 2022
Argentina fans pulled up to Messi's house after winning the World Cup ? @brfootball
— Bleacher Report (@BleacherReport) December 21, 2022
(via @TomasDvoretzky) pic.twitter.com/cHRnpkofyr