சுமார் 4 பில்லியன் மக்கள் முன்பு தோன்றிய மெஸ்ஸி தலைமையிலான சாம்பியன்கள்... - மக்கள் உற்சாக வரவேற்பு...!
பியூனஸ் அயர்ஸ் நகரில் சுமார் 4 பில்லியன் மக்கள் முன்பு அர்ஜென்டினா சாம்பியன்களை பார்த்ததும் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மக்கள் முன்பு தோன்றிய அர்ஜென்டினா சாம்பியன்கள்
கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை அணிவகுப்புக்காக 4 மில்லியன் மக்கள் பியூனஸ் அயர்ஸ் தெருக்களுக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற லயோனல் மெஸ்ஸியின் தலைமையிலான சாம்பியன்கள் பியூனஸ் அயர்ஸ் தெருவில் கூடியிருந்த மக்கள் முன்பு பஸ்ஸில் தோன்றினர். மெஸ்ஸியைப் பார்த்ததும் மக்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர். உலக சாம்பியன்களுக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த உலக கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறது.
Messi is so loved in Argentina it’s actually beautiful pic.twitter.com/j1uzcOmHku
— Messi Media (@LeoMessiMedia) December 21, 2022
???Lionel Messi & his Argentina teammates during their World Cup parade in Buenos Aires.
— FIFA World Cup Stats (@alimo_philip) December 20, 2022
? Campeones del mundo#FIFAWorldCup|#Messi?|#ARG pic.twitter.com/ZJFckoZdhl
Argentina's World Cup winners returned home to a heroes' welcome https://t.co/GPBj31UNJA pic.twitter.com/qpMj9CG2jY
— Reuters (@Reuters) December 20, 2022