அர்ஜென்டினா வெற்றி - பியூனஸ் அயர்ஸ் நகரில் சூழ்ந்த சுமார் 4 மில்லியன் மக்கள்... - வைரலாகும் வீடியோ...!

Lionel Messi Football Viral Video Argentina
By Nandhini Dec 21, 2022 06:07 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாட பியூனஸ் அயர்ஸ் நகரில் மக்கள் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

பியூனஸ் அயர்ஸ் நகரில் சூழ்ந்த சுமார் 4 மில்லியன் மக்கள்

கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை அணிவகுப்புக்காக 4 மில்லியன் மக்கள் பியூனஸ் அயர்ஸ் தெருக்களுக்கு வந்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

argentina-champion-foot-ball-lionel-messi