4 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸிக்கு கிடைத்த அதிர்ஷ்ட ரிப்பன்.... - வைரலாகும் புகைப்படம்...!
4 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸிக்கு கிடைத்த அதிர்ஷ்ட ரிப்பனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
மெஸ்ஸிக்கு கிடைத்த அதிர்ஷ்ட ரிப்பன்
கடந்த டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
அன்று இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸியை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மெஸ்ஸி காலில் அணிந்திருந்த ரிப்பன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பு, நிருபர் ஒருவர் லயோனல் மெஸ்ஸிக்கு, அவரது தாய்க்கும் அதிர்ஷ்ட ரிப்பன் கொடுத்தார். நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸி அதே ரிப்பனை அணிந்திருந்தார்.
தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
4 years ago, a reporter gave Lionel Messi his mothers lucky ribbon for good luck.
— george (@StokeyyG2) December 20, 2022
Messi returned the favour and wore that same ribbon in the World Cup Final… pic.twitter.com/Y55og1oh7h