உலக கோப்பையுடன் நிம்மதியாக தூங்கிய மெஸ்ஸி - நெஞ்சம் நனையும் புகைப்படம் வைரல்...!
உலக கோப்பையுடன் மெத்தையில் நிம்மதியாக தூங்கிய மெஸ்ஸியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா
நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
நேற்று முன்தினம் இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அன்றிலிருந்து கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. சமூகவலைத்தளங்களில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸியை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
உலக கோப்பையுடன் தூங்கிய மெஸ்ஸி
இந்நிலையில், பிரான்ஸுக்கு எதிரான உலகக் கோப்பையை வென்ற பிறகு, மெஸ்ஸி குழந்தையுடன் தூங்குவதுபோல் உலக கோப்பையை அணைத்துக் கொண்டு தூங்கினார்.
தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த மெஸ்ஸியின் ரசிகர்கள், உங்கள் கனவு பலித்தது மெஸ்ஸி... இந்த தூக்கத்திற்கு பின்னால் நீங்கள் எவ்வளவு வலிகளை தாங்கியிருப்பீர்கள்.... நிம்மதியாக தூங்குங்கள்... என்று நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் நெஞ்சம் ஆனந்த கண்ணீர் நனைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Lionel Messi slept with the World Cup trophy over his wife after winning the World Cup against France ???
— Black Stone DNA (@BlackStoneDNA1) December 20, 2022
Ankole / Another 5 / Grade 12 / #Blackstonedailydrive pic.twitter.com/3D6x71Rh6i