நீண்ட நேரம் இரவில் கண் விழிப்பவரா நீங்கள்? - அப்போ அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
மனிதர்கள் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் துாங்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் மன நல கோளாறுகள்,உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். நீண்ட நேரம் இரவில் கண் விழித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
மூட் ஸ்விங்ஸ்
மனிதம் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் துாங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மன நிலை மாற்றங்கள் ஏற்படும் குறிப்பாக எரிச்சல், கோபம், சோர்வு, கவன சிதறல் உள்ளிட்டவை ஏற்படும்.
மன நல பாதிப்பு
சரியான துாக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும்.சரியாக துாங்கவில்லை என்றால் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு
துாக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்.ஒருவர் துாங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு,
தொற்று - எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது.
அதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட துாக்கம் அவசியம்.துாக்கமின்மை உடலுறவின் மீதான ஆர்வத்தை குறைக்கும்.