இந்தியர்கள் என்றால் கோமியம் குடிப்பவர்களா? - சசிதரூர் கவலை

covid19 gomium sachitharur
By Irumporai May 16, 2021 01:19 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் மாட்டு சாணத்தில் குளிப்பதும், பசுவின் கோமியத்தை குடிப்பது மாதிரியான செயல்கள் வைரலாகின.

இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது ட்வீட்டர் பதிவில்:

  பாஜகவின் செயல்களால் உலக மக்களிடையே இந்தியா என்றால் இப்படி தான் என்ற கண்ணோட்டம் மாறலாம்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் வித்தைகாரர்கள் நிறைந்த பூமியாக இந்தியா பார்க்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் நிறைந்த பகுதியாக இந்தியா பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது இந்தியர்கள் என்றால் கோமியம் குடிப்பவர்கள் மாட்டு சாணத்தில் குளிப்பவர்களாகவும் பார்க்கபடலாம்' என தெரிவித்துள்ளார் .