பேரழிவுக்கான அறிகுறியா? கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீன் - மக்கள் அச்சம்!
மெக்சிகோ கடற்கரையில் டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியுள்ளது.
மெக்சிகோ
டூம்ஸ்டே மீன் 36 அடி நீளம் வரை வளரக்கூடியது. அவை 3,280 அடி (1,000 மீட்டர்) ஆழத்தில் வாழும். இதன் முக அமைப்பு டைனோசரஸ் போல் கொண்டுள்ளது. இந்த மீன்களில் ஒன்று கரை ஒதுங்குவது மிகவும் அரிதானது.
தற்பொழுது மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுர் என்ற கடற்கரையில் டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியுள்ளது.இதனை பார்த்த மக்கள் சிலர் மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர் ஆனால் அந்த மீண்டும் மீண்டும் கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டூம்ஸ்டே மீன் என்று அழைக்கப்படும் இந்த ஆழ்கடல் உயிரினம் பெரும்பாலும் இயற்கை பேரழிவுகளுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகின்றது.அதாவது இந்த உயிரினம், பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்புக்கு வருகின்றது என்று சிலர் கூறுகிறார்கள்.
பேரழிவு?
ஜப்பானியப் புராணக்கதைகளில் கதைகளில், டூம்ஸ்டே மீனின் தோற்றம் வரவிருக்கும் பேரழிவின், குறிப்பாகப் பூகம்பங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.முன்னதாக 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்கு முன்னர் ஜப்பானின் கடற்கரையில் பல துடுப்பு மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
#WATCH | Washington | Kash Patel takes oath on the Bhagavad Gita, as the 9th Director of the Federal Bureau of Investigation (FBI).
— ANI (@ANI) February 21, 2025
Source: US Network Pool via Reuters pic.twitter.com/c5Jr0ul1Jm
மேலும் 2024ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் இதே போன்று துடுப்பு மீன் கரை ஒதுக்கியதும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுபோன்று, இப்போது மெக்சிகோவிலும் ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்