’’தம்பி நீங்க சிறப்பா செயல்படுகிறீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்த மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி

politician meets mk stalin arcot veerasamy dmk senior
By Swetha Subash Jan 26, 2022 11:34 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

உடல் நலம் குறித்து விசாரிக்கச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ’’தம்பி நீங்க சிறப்பா செயல்படுகிறீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று சொல்லி நெகிழ்ந்து இருக்கிறார் திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி.

திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், திமுகவின் முன்னாள் பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமானவர் ஆற்காடு வீராசாமி.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் வீடு திரும்பியிருக்கிறார்.

வீட்டிலிருந்தே தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் ஆற்காடு வீராசாமியின் உடல்நிலையை அவரது மகனும் வடசென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான கலாநிதி வீராசாமி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு ஆகியோருடன் நேரில் சென்று பார்த்து ஆற்காடு வீராசாமியை நலம் விசாரித்திருக்கிறார்.

அப்போது முதல்வரிடம் பேசிய ஆற்காடு வீராசாமி, ’’தம்பி நீங்க சிறப்பா செயல்படுறீங்க. மகிழ்ச்சியா இருக்குது’’என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் கட்சியின் தற்போதைய சூழல் குறித்தும் பழைய நினைவுகள் குறித்து முதல்வரிடம் அமைச்சர்களிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.