பொற்கொடியிடம் போலீசார் தீவிர விசாரணை - ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடுக்கிடும் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு தொடா்பு இருப்பதாக போலீசாருக்கு தொியவந்தது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து செம்பியம் காவல்நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு பகீர் வாக்கு மூலம் அளித்தார்.
மேலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து தமிழ்நாடு அரசு கண்டுபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
சுரேஷின் மனைவி
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரரானை மேற்கொண்டத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.மேலும் இந்த வழக்கில் திமுக ,அதிமுக ,பாஜக நிர்வாகிகள் , வழக்கறிஞர்கள் என 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனா். தொடர்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு தொடா்பு இருப்பதாக போலீசாருக்கு தொியவந்தது. தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார் ஆந்திராவில் உள்ள உறவினா் வீட்டில் பதுங்கி இருந்த பொற்கொடியை சுற்றி வளைத்து பிடித்தனா்.
பின்னா் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவாிடம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொற்கொடியின் பங்கு என்ன என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.