புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் - யார் இவர் ?

By Vidhya Senthil Nov 09, 2024 04:34 AM GMT
Report

 தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அர்ச்சனா பட்நாயக்

கடந்த 2018 ம் ஆண்டு முதல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ பதவி வகித்து வந்தார். தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் அண்மையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

archana patnaik

அப்போது சத்ய பிரதா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பாகத் தமிழக கால்நடைத்துறைச் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து த்ய பிரதா சாஹூ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாம்பு கடியை நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு - வெளியான அறிவிப்பு!

பாம்பு கடியை நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு - வெளியான அறிவிப்பு!

 நியமனம்

மேலும் அவருக்குப் பதிலாக புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவைச் சேர்ந்தவர்.

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி

2002ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.,பணியில் சேர்ந்தார். கோவையின் முதல் பெண் ஆட்சியாளராகவும் ,நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

தற்பொழுது தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.