திமுக-வுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்

Arvind Kejriwal
By Fathima Apr 20, 2026 04:11 AM GMT
Report

முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக-வுக்கு ஆதரவாக டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திமுக-வுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் | Aravind Kejriwal Campaign In Tamilnadu 

இதுதொடர்பில் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஸ்டாலின் எனது நெருங்கிய நண்பர், சகோதரரை போன்றவர், அவருக்காக பிரசாரம் செய்ய நான் வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது, நல்லாட்சியை வழங்கி வருகிறார். பாஜக அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை ஸ்டாலின் எதிர்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.