அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை அவர்களை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பில் கிராமம், கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.
வாக்கு சேகரிக்க வருன் அண்ணாமலைக்கு கிராம மக்கள் பொன்னாடை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அண்ணாமலை மேல் வழக்கு இருப்பதாக திமுக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு சொன்னதால் வேட்பு மனு நிறுத்தி வைப்பதாக சொன்ன தகவல் பொய்யானது. படிக்காமல் வந்த திமுக அரசியல் வாதிகளை கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்பது இது உதாரணம்.
திமுக வேட்பாளர் அரவக்குறிச்சி தொகுதியில் 50 ஆயிரம் வித்தியாசத்தில் தோல்வியை தழுவும். பாஜக பள்ளபட்டிக்குள் போகும், பள்ளபட்டி இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு பகுதி, ஜமாத் கட்டுப்படுத்தாது. 8 பேர் ஜமாத்தில் உட்காந்து கொண்டு அறிக்கை விடுவது பாஜகவை கட்டுப்படுத்தாது. பள்ளபட்டியில் பெஸ்ட் இஸ்லாமியர்கள் இஸ்லாம் மதத்தை பற்றி பேச, வாதாட வர வேண்டும்.
2014 ஆண்டு முதல் இஸ்லாமிய மக்களுக்கு எந்த கட்சி அதிக நிதிகளை ஒதுக்கியது என்று தெரியுமா, காங்கிரஸ் கட்சியை விட, பாஜக தான் அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ஜமாத்தை திமுக பார்ட்டி என மாற்றிக் கொள்ளுங்கள். பொது மேடையில் குரான் தெரிந்த ஜமாத் தலைவர்கள் வாக்குவாதம் செய்யட்டும். எனக்கு குரான் தெரியும், குரனை மதிக்கின்றவன்.
அண்ணாமலையை பார்க்க மக்கள் வருகிறார்கள். ஜமாத் யாரும் எங்களை தடுக்க முடியாது. ஓட்டுக்காக மக்களிடம் பயத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். பெண்கள் என்னை நம்புகிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலை குறைய ஆரம்பித்து விட்டது. திமுக இப்பவே மணல் திருட போரேனு ஆரம்பிச்சுட்டாங்க, அதனை தொடர்ந்து. இடுப்பை கிள்ளுவார்கள், திருடுவார்கள், கட்டப்பஞ்சயத்து செய்வார்கள் என்றார்.