கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம்...என் மனசுல ஆரவே இல்லை - குமுறிய அறந்தாங்கி நிஷா
பெண்களை வார்த்தைகளால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம் என நடிகை அறந்தாங்கி நிஷா கூறி இருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா
தமிழ் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பெரும் பிரபலமடைந்திருப்பவர் அறந்தாங்கி நிஷா. அவரின் டைமிங் காமெடி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக, தனியார் பட்டிமன்றத்தில் பேச்சாளராக, காமெடி நடுவராக பல பரிமாணங்களில் பயணித்து வரும் நிஷா, அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றார்.
அண்மையில், சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று பல உதவிகளை செய்தார் நிஷா. இது அவரின் மனிதாபிமான குணத்தை வெளிப்படுத்துகிறது.
அவருக்கு பலருக்கும் பாராட்டுகளை வழங்கினார்கள். சொந்த சம்பாத்தியத்தில் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு உதவியாக திரும்ப எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றேயாகும்.
கொடூரத்தின் உச்சம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நிஷா தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில், பெண்களை எளிதில் வார்த்தையால் காயப்படுத்தி விடுகிறார்கள் என்றும் பெண்களை நேரடியாக கற்பழிப்பது வேறு, வார்த்தைகளால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
இதை பெண்கள் மீது மிக இயல்பாக செய்கிறார்கள், எதை செய்தாலும் விளம்பரத்திற்காக செய்கிறேன் என்கிறீர்கள். விளம்பரத்திற்காக செய்து நான் என்ன சிஎம் அல்லது பிஎம் ஆகப் போகிறேனா? என்று வினவிய நிஷா, சமுதாயத்திற்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை ஏன் இப்படி காயப்படுத்துகிறீர்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.