குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மரணம்

car accident tiruvannamalai arani 6 death 3 month baby died
By Anupriyamkumaresan Aug 13, 2021 12:58 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விபத்து
Report

ஆரணி அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது கார் டயர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாத குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆரணி அடுத்த புதூர் மாரியம்மன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மரணம் | Arani Tiruvannamalai Car Accident 6 Death

அப்போது, சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில், காரில் இருந்த 3 மாத குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மரணம் | Arani Tiruvannamalai Car Accident 6 Death

மேலும் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.