ஆரணி அருகே சைவ ஹோட்டல் பொரியலில் எலி தலை..! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையார்கள்
ஆரணி அருகே சைவ உணவகம் ஒன்றில் வாங்கிச் வாங்கிச் சென்ற சாப்பாட்டு பொரியலில் எலி தலை இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சைவ ஹோட்டல் பொரியலில் எலி தலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு சைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில், காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர், துக்க நிகழ்வுக்காக மொத்தமாக உணவு வாங்கி இருக்கிறார்.
இந்த துக்க நிகழ்வுக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது, சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரின் உணவில், பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, எலி தலையுடன் இருந்த பீட்ரூட் பொரியலை எடுத்துக் கொண்டு முரளியின் உறவினர்கள் ஹோட்டலுக்கு சென்று கேட்டுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம்
அப்போது, உணவக ஊழியர்கள் 6 மணி நேரத்திற்கு முன்பு உணவு அனுப்பியதாகவும், 6 மணி நேரத்திற்குப் பிறகு எலி தலை இருப்பதாக கூறுவது சரி கிடையாது என்று கூற இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்காக உணவை எடுத்து சென்றனர்.