திருமணத்துக்கு முன்பு வெளிநாட்டில்.. நடிகை வரலக்ஷ்மியா இப்படி - வெளியான புகைப்படம்!
திருமணம் நடக்கும் முன்னதாகவே நிக்கோலாயும், நடிகை வரலட்சுமியும் தாய்லாந்துக்கு டூர் சென்றுள்ளனர்.
வரலக்ஷ்மி சரத்குமார்
போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அதகளம் செய்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், கடைசியாக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். தற்போது 38 வயதாகும் வரலக்ஷ்மி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
தாய்லாந்து டூர்
சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடக்கும் முன்னதாகவே நிக்கோலாயும், வரலட்சுமியும் தாய்லாந்துக்கு டூர் சென்றிருக்கின்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் இதே போன்ற மகிழ்ச்சியுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என வாழ்த்திவருகின்றனர்.