அரக்கோணத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் அரக்கோணத்தில் வாக்கு சேகரிப்பு. அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் கௌதம் சென்னா அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
வெளிச்சத்துக்கு வராமல் பின்னோக்கி சென்று வேலை செய்யும் எந்த ஒரு சக்தியும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கும் கிடையாது, ஆனால் பாரதிய ஜனதா கட்சி அப்படி கிடையாது, அதற்குப் பின்னாடி வேலை செய்வதற்காக ஆர்எஸ்எஸ் போன்ற பல இயக்கங்கள் உள்ளது தமிழகத்தை பத்தாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழக ஆட்சி செய்யும் போது ஐந்தாண்டு காலம் ஜெயலலிதா ஆட்சி செய்தார்.
அடுத்த ஐந்தாண்டு காலம் பழனிச்சாமி பதவி ஏற்றவுடன் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்கிறது என்பதை விட பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தை ஆட்சி செய்கிறது என்றும் கூறலாம்.