அரபிக்குத்து பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய யாஷிகா ஆனந்த் - வைரல் வீடியோ

trending sunpictures beast yashikaaannand arabickuthu
By Petchi Avudaiappan Feb 21, 2022 04:37 PM GMT
Report

நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெஜ்டே, இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  பீஸ்ட் படம்  ஏப்ரல் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை அனிருத், சோனிட்டா காந்தி பாடியுள்ளனர். அரபிக்குத்து பாடலை பலரும் இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் நடிகைகள் பூஜா ஹெக்டே, சமந்தா ஆகியோரை தொடர்ந்து யாஷிகா ஆனந்தும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.