‘அரபி குத்து’ பாட்டுக்கு நண்பர்களுடன் மாஸா நடனமாடிய அனிருத் - வைரல் வீடியோ
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது.
வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸான நடனமும், அனிருத்தின் அசத்தலான இசையும் இப்பாடலுக்கு பலத்தை சேர்த்துள்ளது. யூட்யூப்பில் இதுவரை 41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 50 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடல்.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய நண்பர்களுடன், ‘ஹலமித்தி ஹபிபோ’ பாட்டுக்கு மாஸா நடனம் ஆடியுள்ளார்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -