பாலைவனம் , ஒட்டகம்: தெறிக்க விடும் அரபிக்குத்து பாடல்

Beast arbickuthusong
By Irumporai Feb 16, 2022 11:30 AM GMT
Report

 காதலர் தினத்தன்று வெளியான ''அரபிக் குத்து'' பாடலுக்கு பாலைவனத்தில் நடனம் ஆடும், வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத்  இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக ’’ அரபிக் குத்து ‘’ பாடல் வெளியானது  சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவ்வாறான நிலையில் கடும் வெயிலடிக்கும் பாலைவனத்தில் ஒட்டகத்தை அருகில் வைத்துக்கொண்டு ஷேக்குகள் சிலர் ஒரே மாதிரியான உடை அணிந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் அரபிக்குத்து பாடலை ரிக்ரியேட் செய்யும் விதமாக அதே நடன அசைவுகளுடன் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்கள் பலரையும் ஈர்த்து வருகிறது. ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர்.