12 நாட்களில் பீஸ்ட் படம் செய்த மிகப்பெரிய சாதனை - கொண்டாடும் ரசிகர்கள்

Beast Thalapathyvijay arabickuthu BeastFirstSingle HalamithiHabibo
By Petchi Avudaiappan Feb 26, 2022 07:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத், சோனிட்டா காந்தி இருவரும் பாடியுள்ளனர். 

தொடர்ந்து ரிப்பீட் மோடில் கேட்கப்படும் இந்த பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.