பாட்டியிடம் அரபிக்குத்து பாட்டுக்கு Vibe செய்த தாத்தா... - இணையதளத்தை கலக்கும் வீடியோ...!

Anirudh Ravichander Beast Viral Video
By Nandhini Nov 04, 2022 05:35 AM GMT
Report

பாட்டியிடம் அரபிக்குத்து பாட்டுக்கு Vibe செய்த தாத்தாவீன் வீடியோ தற்போது இணையதளத்தை வைரலாகி வருகிறது.

அரபிக் குத்து பாட்டு

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது.

வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்தனர். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பலர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர்.

arabic-kuthu-grandfather-dance-viral-video

பாட்டியிடம் அரபிக்குத்து பாட்டுக்கு Vibe செய்த தாத்தா

தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாட்டியிடம் அரபிக்குத்து பாட்டுக்கு தாத்தா ஒருவர் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்... தாத்தா மாஸ்... செம்மய்யா டான்ஸ் ஆடுறீங்க.. என்று சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.