லட்சங்களுக்கு விலை போன ஏ.ஆர்.ரகுமான் ஆடை..யார் வாங்குனாங்க தெரியுமா?

A.R.Rahman A.R.RahmanDress 6.75LakhAuction ஏ.ஆர்.ரகுமான்
By Thahir Mar 22, 2022 07:20 PM GMT
Report

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஆடை ரூ.6.75 லட்சத்துக்கு விலை போனது.

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான்.1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

லட்சங்களுக்கு விலை போன ஏ.ஆர்.ரகுமான் ஆடை..யார் வாங்குனாங்க தெரியுமா? | Ar Rahmans Dress Auctioned For 6 75 Lakh

இவர் இசையில் வெளிவந்த ரோஜா திரைப்பட பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அந்த நாட்களில் எங்கு திரும்பினாலும், ரோஜா திரைப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இதையடுத்து, தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதையடுத்து, தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து சாதனை படைத்தார்.

2009 இல் ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார். இந்த விருதின் மூலம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்தினார்.

சினிமாத்துறையில், 27 வருடங்களுக்கும் மேலாக தன்னிகரில்லா இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28வது தின விழா ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

இதில், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். இதன் ஒருபகுதியாக மாற்றுத்திறனாளிகள் ஆடைகள் வாங்க உதவும் திட்டத்தின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது.

இதில் அவர் அணிந்திருந்த ஆடை ரூ.6.75 லட்சத்துக்கு விற்பனையானது. பிரமோத் சுரடியா இந்த ஆடையை ஏலத்தில் வாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஏலத்தில் விடப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.