தாயை நினைத்து உருகும் ஏ.ஆர்.ரகுமான்: வைரலாகும் வீடியோ!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் இசைப்புயல் என்றழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமானின் சிறுவயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால் தாயார் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். தனது தந்தை ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவரிடம் இருந்த ஏராளமான இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் மூலம் தனது தாயார் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்ததாக நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர். ரகுமான் தாயார் கரீமா பேகம் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். நேற்று கரீமா பேகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர். ரகுமான் தனது தாயாருக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ள இந்த வீடியோவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.