29 வருட குடும்ப வாழ்க்கை; விவாகரத்து காரணம் இதுதான் - ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்!

Tamil Cinema A R Rahman Divorce
By Sumathi Nov 21, 2025 06:12 PM GMT
Report

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து காரணம் குறித்து உடைத்து பேசியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் 

இந்திய இசை உலகில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தனது மனைவி சாய்ரா பானுவுடன் 29 ஆண்டுகள் வாழ்த்து 3 குழந்தைகளையும் பெற்றெடுத்த நிலையில்,

ar rahman

கடந்த ஆண்டு திடீரென விவாகரத்து குறித்து அறிவித்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், “குடும்பத்தோடு நான் வெளியே சென்றாலும் என்னை ஒரு சினிமா பிரபலமாகவே மக்கள் பார்க்கிறார்கள். நான் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்ற உணர்வு தான் அது குடும்பத்தினருக்கு ஏற்படுத்துகிறது.

பொது இடங்களில் ரசிகர்களின் அளவற்ற நேசம், சில நேரங்களில் தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுகிறது. உணவு சாப்பிடும்போது கூட ‘ஒரு செல்பி, ஒரு புகைப்படம்’ என்ற கோரிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். “நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியும், ரசிகர்கள் அது முடியும் வரை காத்திருக்க விரும்புவதில்லை.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்; எப்போது, எங்கு தெரியுமா?

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்; எப்போது, எங்கு தெரியுமா?

பிரைவசி பாதிப்பு

அவர்கள் அன்பை நான் மதிக்கிறேன், ஆனால் அதை சமாளிப்பது எப்போதும் கடினமே. குழந்தைகள் சிறிய வயதிலிருந்தே என்னுடன் தனிப்பட்ட நேரம் செலவிட முடியாத சூழ்நிலை இருந்தது. குடும்பமாக ஒன்று கூடுவதும் மிகக் குறைவு.

29 வருட குடும்ப வாழ்க்கை; விவாகரத்து காரணம் இதுதான் - ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்! | Ar Rahman Reveals About Divorce Reason

எல்லோரும் என் நண்பர்கள், ஆனால் நண்பர்களோடு நேரம் செலவிட முடியாத நண்பன் நான்தான். ஹாலிவுட்டில் யாராவது விதிமீறி புகைப்படம் எடுக்க முயன்றால் நடிகர்கள் நேரடியாக கண்டிப்பார்கள்.

ஆனால் இந்தியாவில் அப்படி நடப்பதே இல்லை” என வேதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான தொடர் பிரச்சனைகளே குடும்ப விரிசலுக்கு காரணமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.