மீசையுடன் தோன்றிய ஏ.ஆர்.ரஹ்மான் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இசையின் சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல உயரிய விருத்துக்கு சொந்தக்காரரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் மீசையில்லாமலே அனைத்து இடங்களிலும் தோன்றுவார். இதனால் எப்போது பார்த்தாலும் அவர் சின்ன இளைஞரைப் போல் காணப்படுவார்.
இதனிடையே துபாயில் இசையமைப்பு தொடர்பான வேலைகளுக்காக சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீசையுடன் இருக்கும் ஃபோட்டோவை முதன் முறையாக பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் ஜூம் மீட்டிங் ஆப்பில் மீசையுடன் இருக்கும் ஃபோட்டோ...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த ஃபோட்டோவை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த 4 மணி நேரத்தில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.