சைவத்துக்கு மாறிய ஏ.ஆர் ரஹ்மான் : ஷாக்கான ரசிகர்கள்

Ponniyin Selvan: I
By Irumporai Jul 31, 2022 05:41 PM GMT
Report

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சுவாரசிய முடிவை எடுத்துள்ளது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்   

மணிரதனம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று இணைய்த்தில் வைரலாகி வருகிறது.

சைவம்தான்

இரண்டு பாகங்களாக உருவாகி இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்த பத்து நாட்களுக்கு ஒரு புதிய முயற்சியை எடுத்து இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப்பதிவில் அடுத்த 10 நாட்களுக்கு நான் சைவ உணவுக்கு மாறுகிறேன்” என்று பதிவிட்டு, தனது உணவையும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு இணைய வாசிகள் பல தரப்பட்ட கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.