இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் டும் .. டும் டும் - மாப்ள யார் தெரியுமா?

daughter arrahman engaged
By Irumporai Jan 02, 2022 01:03 PM GMT
Report

தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.  இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர்.

இதில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கு தான் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மணமகன் பெயர் ரியாஸ்தீன் ஷேக். இவர் தொழிலதிபராக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  வீட்டில் டும் .. டும் டும்  - மாப்ள யார் தெரியுமா? | Ar Rahman Daughter Khatija Gets Engaged

தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்துள்ளது, ஆனால் திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கதீஜா ரகுமான் தந்தையைப் போல் இசையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெறும் புதிய மனிதா பாடலை பாடினார்.

இதுதவிர சுயாதீன இசையிலும் ஆர்வம் கொண்டுள்ள கதீஜா, பல்வேறு இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். இவர் இஸ்லாமிய கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றுகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.