ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? - அதிர்ச்சியில் திரையுலகம்
ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தபோது அழுத்தம் அதிகம் இருந்ததாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அதில் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தது நரகமாக இருந்தது. அதற்கு காரணம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பார்கள். அதற்குள் நான் பாடல்கள், பின்னணி இசையமைக்க வேண்டும். என் ஸ்டுடியோ அமைந்திருக்கும் பகுதியில் மின்சார பிரச்சனை இருந்தது. அதனால் இரண்டு ஜெனரேட்டர்கள் வைத்து வேலை செய்தேன். அதெல்லாம் நரகம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
மேலும் அப்போது ஒரே நேரத்தில் நான் மூன்று படங்களில் வேலை செய்தேன். ஆனால் ரஜினியின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்கு பிற இயக்குநர்களோ எங்கள் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது ஏ.ஆர். என்பார்கள் . எனவே நான் பண்டிகைகளை வெறுத்தேன். தீபாவளிம், புத்தாண்டு, பொங்கலாகட்டும் எனக்கு பிடிக்காது.
பண்டிகை காலத்தில் நாம் எல்லாம் என்ஜாய் பண்ண வேண்டும் என்று எவ்வளவு பிரஷரில் ரஹ்மான் வேலை செய்திருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினி நடித்துள்ள முத்து, லிங்கா, கோச்சடையான், சிவாஜி, எந்திரன், 2.0, படையப்பா, பாபா ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.