மகளின் பூப்புனித நீராட்டு விழா - குத்தாட்டம் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்
மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழில் கமர்சியல் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் முருகதாஸ். அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில், அவரது மகள் ஹர்ஷிதாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முருகதாஸின் உறவினர்கள் திரளாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து முருகதாஸ் கணிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தை இயக்கியுள்ளார்.
வைரல் வீடியோ
வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , ருக்மினி வசந்த் , விக்ராந்த் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
@ARMurugadoss dancing and vibing to the #kanimaa song along with their family 🕺💃💥@Suriya_offl @karthiksubbaraj @Music_Santhosh @Lyricist_Vivek @stonebenchers #Retro pic.twitter.com/noAtWvQBli
— Ap Arun Suriya (@ApArunSuriya) June 16, 2025
சமீபத்தில் சென்னை எல்.ஐ.சி அருகில் இந்த படத்தின் பாடல்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தகட்ட அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.