சச்சினை தகாத முறையில் திட்டினேன்.. அப்போ அவர் சொன்னதை மறக்க முடியாது பாக். வீரர் பரபரப்பு பேட்டி
சச்சின் தகாத வார்த்தையில் திட்டியதாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
முஸ்தாக் பேட்டி
பாகிஸ்தானின் பிரபலமானசுழல் பந்துவீச்சாளராக இருந்த சக்லின் முஸ்தாக் சச்சினிடன் நிகழ்ந்த ஒரு அனுபவத்தை தற்போது கூறி இருந்தார். 1997 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றை முஸ்தாக் கூறியுள்ளார். அதில், நாங்கள் அப்போது கனடாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்றோம் நான் இங்கிலாந்தின் மைதானத்தில் சிறப்பாக விலையாடிய திமிரோடு நான் பந்து வீச்சை தொடங்கினேன்.
[
சச்சினை திட்டினேன்
நான் முதலில் பந்து வீசும் போது அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்பட்டேன் அப்போது அவரை தகாத வார்த்தையில் திட்டினேன். ஆனால் அவர் என் அருகில் வந்து சில வார்த்தைகளை சொன்னார். சக்கி, நீ இப்படி செய்வாய் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன்னை பார்ப்பதற்கு அவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆள் மாதிரி தெரியவில்லை. நான் உன்னை மிகவும் நல்லவன் என்று நினைத்தேன்.
பந்துகளை விளாசினார்
ஆனால் நீ இப்படி செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் பாதித்தது .
அதே சமயம் நான் வீசிய பந்துகளை விளாசி அதிக ரன்கள் குவித்தார் ,அவரை ரன் எடுக்க விடாமல் என்னால் தடுக்க முடியவில்லை , பிறகு போட்டி முடிந்தவுடன் மாலை அவரை சந்தித்தேன் நீங்கள் புத்திச்சாலியான நபர் என்று அவர் பாராட்டினேன், பேட்டிங் மட்டும் அல்ல வார்த்தையின் மூலமாகவும் என்னை சச்சின் சிக்க வைத்தார் எனக் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.